திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

மும்பை டோங்கிரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 40 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல்

ANI | Published: 16th July 2019 01:07 PM


மும்பை: மும்பையின் டோங்கிரி பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பராமரிப்பில்லாத பழைய கட்டடம் என்பதால், கடந்த வாரத்தில் பெய்த கன மழை காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக கட்டட இடிபாட்டில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டடம் இடிந்துவிழுந்த இடம் மிகக் குறுகிய சாலைகளைக் கொண்டிருப்பதால் மீட்புக் கருவிகளைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : mumbai rescue operation Dongri building collapse

More from the section

ஐந்து நாட்கள்..மூன்று நாடுகள்..ஜி7 மாநாடு..அமீரகத்தின் உயரிய விருது: ஆகஸ்ட் 22 இல் மோடி பிரான்ஸ் பயணம் 
7 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்யுங்கள்: 200-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பி-க்களுக்கு உத்தரவு
பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா மரணம் 
காஷ்மீர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு