இந்தியா

மும்பை அடுக்கு மாடி கட்டட விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

16th Jul 2019 04:47 PM

ADVERTISEMENT


மும்பை அடுக்கு மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. 

தெற்கு மும்பை டோங்ரி பகுதியில் நூறாண்டு பழமையான அடுக்கு மாடி கட்டடம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 11.40 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் இதுகுறித்து பேசினார். அப்போது, 

"இந்த கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது. இந்தப் பகுதியை மறுசீரமைப்பு செய்ய நாங்கள் அனுமதி கொடுத்துள்ளோம். மறுசீரமைப்புப் பணிகள் தாமதமானதா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியும். தற்போதைக்கு இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதில் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்றார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிர வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத் தலைவர் உதய் சமந்த் இதுகுறித்து பேசுகையில், 

"இந்த கட்டடம் மகாராஷ்டிர வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்தது. இருந்தபோதிலும், மறுசீரமைப்பு செய்வதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான மேம்பாட்டாளரையும் உள்ளூர் வாசிகள் 2012-இல் நியமித்தனர்" என்றார். 

தெற்கு மும்பையை பொறுத்தவரை பெரும்பாலான கட்டடங்கள் பழமை வாய்ந்த கட்டடங்கள் ஆகும். புள்ளி விவரங்களின்படி இதுபோன்ற 499 கட்டடங்கள் அபாயகரமானது என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் 70 கட்டடங்கள் மட்டுமே காலி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் இதற்கும் குறைந்த எண்ணிக்கையின் அளவிலான கட்டடங்களுக்கே மறுசீரமைப்பு செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT