பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
இந்த வழக்கு விசாரணையில், குஜராத் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இந்த வழக்கில் இதுவரை 210 சாட்சிகளிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆசாராம் பாபு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நிராகரித்தது. குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த சகோதரிகள் 2 பேர் ஆசாராம் பாபு, அவரது மகன் நாராயண் சாய் ஆகியோருக்கு எதிராக தனித்தனியாக காவல் நிலையத்தில் அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.