இந்தியா

நாட்டின் ஏற்றுமதி 9.71 சதவீதம் சரிவு

16th Jul 2019 01:16 AM

ADVERTISEMENT


நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 9.71 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 
இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,501 கோடி டாலராக (ரூ.1.75 லட்சம் கோடி) இருந்தது. கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 2,770 கோடி டாலருடன் (ரூ.1.94 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் இது 9.71 சதவீதம் குறைவாகும்.
நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள் மற்றும் பெட்ரோலியத் தயாரிப்புகளின் ஏற்றுமதி கணிசமாக குறைந்ததையடுத்து நாட்டின் ஏற்றுமதி சரிவைக் கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்து காணப்பட்டதால் நாட்டின் இறக்குமதி 4,430 கோடி டாலரிலிருந்து (ரூ.3.10 லட்சம் கோடி) 9 சதவீதம் சரிந்து 4,029 கோடி டாலரானது (ரூ.2.82 லட்சம் கோடி).
வர்த்தக பற்றாக்குறை 1,660 கோடி டாலரிலிருந்து குறைந்து 1,528 கோடி டாலரானது என அந்தப் புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT