செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து  

DIN | Published: 16th July 2019 11:53 AM

சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது என்று கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்களான பிரதாப் கௌடா பாட்டீல், ரமேஷ் ஜார்கிஹோளி, நாராயண கௌடா, விஸ்வநாத், கோபாலய்யா, சோமசேகர், பி.சி. பாட்டீல், பைரதி பசவராஜ் உள்ளிட்ட 10 பேர் பதவியை ராஜிநாமா செய்தனர். இருப்பினும், அதை சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர். ரமேஷ் குமார் ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் 10 எம்எல்ஏக்களும் மனு தாக்கல் செய்தனர். 

இதன்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், 16ஆம் தேதி மனு விசாரிக்கப்படும், அதுவரையிலும் ராஜிநாமா மீது எந்த முடிவையும் எடுக்கக் கூடாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கூடாது என்று சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டது. இதனிடையே, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்களான ஆனந்த் சிங், கே. சுதாகர் ரெட்டி, என். நாகராஜ், முனிரத்னா, ரோஷன் பெய்க் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளனர்.

அதில் தங்களது ராஜிநாமாவை பேரவைத் தலைவர் கே.ஆர். ரமேஷ் குமார் ஏற்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு, 5 எம்எல்ஏக்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, நிலுவையில் உள்ள 10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

10 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவுடன் சேர்த்து, 5 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுவையும் இன்று விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வநத்தது. அப்போது எம்எல்ஏக்களின் ராஜினாமா, தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் எனக் கேள்வி எழுதிய நீதிபதி சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என நாங்க உத்தரவிட முடியாது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறது பாகிஸ்தான்: டிரம்ப்பிடம் மோடி குற்றச்சாட்டு
தேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் வெளியீடு
10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
அரசு பங்களாக்களை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்களுக்கு ஒரு வாரம் கெடு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு