இந்தியா

ஒரு குழந்தை இதோ இருக்கு, மற்றொன்று எங்கே? கவலையோடு கேட்டுக்  கொண்டிருக்கும் தாய்!

15th Jul 2019 11:49 AM

ADVERTISEMENT

 

ஒரு குழந்தை இதோ இருக்கு, மற்றொரு குழந்தை எங்கே? என்று கவுண்டமணி போல கேட்டதையே திருப்பிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் இரட்டைக் குழந்தைகளின் தாய்.

ஜெய்ப்பூரில் உள்ள ஜனனா மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்ப்பிணிக்கு பிரசவத்துக்கு முன்பு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரசவத்தின் போது அவருக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்திருப்பது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இது குறித்து தாயின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு பதிலளித்த ஊழியர்கள், கருப்பைக்குள் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையோடு சண்டையிட்டிருக்கும், இதில் ஒரு குழந்தை வயிற்றிலேயே இறந்திருக்கும் என்று கூறியுள்ளனர்.

கடந்த ஜூன் 19ம் தேதி தனியார் ஸ்கேன் மையத்தில் ராமாதேவிக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு, ஜூலை 9ம் தேதி ஜனான மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இது பற்றி சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர் கூறுகையில், ஸ்கேன் பரிசோதனையில் இரண்டு குழந்தைகள் இருப்பது போலத் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தோம். ஒரு குழந்தைதான் இருந்தது. இது எப்படி நடக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவரே, கேள்வியை எழுப்பியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT