இந்தியா

கார்கில் "வெற்றி ஜோதி' பயணம்: ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்

15th Jul 2019 01:12 AM

ADVERTISEMENT

கார்கில் போரின் 20-ஆவது ஆண்டு வெற்றி தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, தில்லியிலுள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்திலிருந்து வெற்றி ஜோதி பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
 நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு செல்லவிருக்கும் இந்த ஜோதி பயணம், கார்கில் போர் வெற்றி தினத்தன்று ஜம்மு-காஷ்மீரின் திராஸ் நகரில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நிறைவடைய உள்ளது. வெற்றி ஜோதியை, ராணுவ வீரர்கள் அடங்கிய மோட்டார் சைக்கிள் குழுவினர் எடுத்துச் செல்ல உள்ளனர். இந்த தொடக்க நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி விபின் ராவத்தும் பங்கேற்றார். கடந்த 1999-இல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.
 நிகழாண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி, தில்லியிலும், திராஸ் நகரிலும் ராணுவத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT