இந்திய பிரதமர்களின் பெருமைகளை விளக்கும் வகையிலான அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் வரும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய பொதுப் பணித் துறை (சிபிடபிள்யூடி) இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து சிபிடபிள்யூடி அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பான தீன் மூர்த்தி பவனின் வளாகத்தில் இந்திய பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிபிடயிள்யூடி அண்மையில் நடத்திய கூட்டத்தில், சிசிசிடிவி கேமராக்கள், நகரும் படிக்கட்டுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது. சுமார் ரூ.66 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அருங்காட்சியம் அமைக்கும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணிகள் முழுமையடைந்ததும், அந்த கட்டடம் மத்திய கலாசார துறை அமைச்சகத்திடம் இதர பணிகளுக்காக ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.