25 ஆகஸ்ட் 2019

தெலங்கானாவில்.. சிறந்த தாசில்தார் விருது பெற்றவரின் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம், நகை!

DIN | Published: 12th July 2019 12:53 PM


ஹைதராபாத்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மாநிலத்தின் சிறந்த தாசில்தார் என்ற விருது பெற்றவர்கள் லாவண்யா. இன்று இவரது வீட்டில் நடந்த அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து, லாவண்யாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரவே, அவரது ஹைதராபாத் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். லாவண்யா மீதான சந்தேகப் பார்வையில் எந்த தவறும் இல்லை என்பதை அவரது வீட்டில் கட்டுக் கட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருந்த காந்தியின் படம் உணர்த்தியது.

ரூ.93.5 லட்சம் ரொக்கப் பணமும், 400 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

விவசாயியின் நிலத்தின் பத்திரத்தில் சிறு திருத்தம் மேற்கொள்ள லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்ட விவகாரத்தில், விவசாயி கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லாவண்யா கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் இல்லாமல், அவரது 9 வங்கிக் கணக்குகளுக்கான வங்கிப் புத்தகங்கள், 45 விதமான சொத்துக்களை வாங்கி சேர்த்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

நிலத்துக்கான பத்திரங்களை பிடுங்கி வைத்துக் கொண்டு, லஞ்சம் கொடுத்தால்தான் அதனை தருவேன் என்று லாவண்யா லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, தனது நிலப்பத்திரத்தைக் கேட்டு விவசாயி ஒருவர், லாவண்யாவின் காலில் விழுந்து கதறி அழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான போதே, லஞ்ச ஒழிப்புத்துறையினர், லாவண்யாவைக் கண்காணிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Telangana Tahsildar Tahsildar Lawanya anti-corruption bureau

More from the section

பெண்களை படமெடுத்து மிரட்டிய தமிழக மென் பொறியாளர் கைது
கடலோரப் பகுதிகளில் உஷார் நிலையில் கடற்படை: பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி

காஷ்மீருக்குள் செல்ல ராகுல் உள்ளிட்ட தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
 

அருண் ஜேட்லி மறைவு

ஜேட்லி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல்