இந்தியா

புதிய வீட்டு வாடகைச் சட்டம்: மத்திய அரசு பரிசீலனை

12th Jul 2019 02:50 AM

ADVERTISEMENT

வீட்டு வாடகை உயர்த்தப்படுவதை 3 மாதங்களுக்கு முன்னரே குடியிருப்பவரிடம் உரிமையாளர் தெரியப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் புதிய வீட்டு வாடகைச் சட்டத்தை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மாதிரி வீட்டு வாடகைச் சட்டம் - 2019 என்ற வரைவுச் சட்டத்தை மத்திய நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. அதில், வீட்டு வாடகையை உயர்த்த உரிமையாளர் விரும்பினால், அதுதொடர்பாக எழுத்து மூலம் 3 மாதங்களுக்கு முன்னரே குடியிருப்பவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்தம் முடிவடைந்ததற்குப் பிறகும் குடியிருப்பவர் வீட்டை காலி செய்யாமல் இருந்தால், இரண்டு மாதங்களுக்கு இரட்டிப்பு வாடகையும், அதற்கு மேல் நான்கு மடங்கு வாடகையும் வசூலிக்கவும் அந்த வரைவுச் சட்டம் பரிந்துரைக்கிறது.
அத்துடன் வாடகை விவகார அதிகாரியாக மாவட்ட ஆணையர்களை நியமிக்கவும் அந்த வரைவுச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாடகைக்குக் குடியிருப்போருக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரச்னைகளைக் களையவும், இந்த விவகாரத்தை நெறிப்படுத்தவும் மத்திய நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT