செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்கக் கூடாது: காங்கிரஸ் உறுப்பினர்கள் மனு

DIN | Published: 12th July 2019 11:59 AM

கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். ஆனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதங்களை, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்க மறுத்துவிட்டார். 

இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், தங்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், 10 எம்எல்ஏக்களும் கர்நாடக சபாநாயகர் முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

அதில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது, தார்மீக அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்கலாம். மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்கக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகர் மனுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மனுவும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அயோத்தி வழக்கு: சமஸ்கிருத மொழி பொறிக்கப்பட்ட கல்வெட்டை வைத்து வாதம்
ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ வருகையைத் தொடர்ந்து அமலாக்கத் துறை வருகை
எனது 75% கல்லீரல் கெட்டு விட்டது: அதிர வைத்த பாலிவுட் நடிகர் 
நிலவின் வட்டப்பாதைக்குள் சென்றடைந்தது சந்திரயான்-2
75 வயது ஆகி விட்டது: பதவியை ராஜிநாமா செய்த மாநில அமைச்சர்