இந்தியா

கல்வி துறைக்கான ஒதுக்கீடு 13 சதவீதம் அதிகரிப்பு

6th Jul 2019 01:31 AM

ADVERTISEMENT


மத்திய அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பட்ஜெட்டில் அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, கல்வி துறைக்கு ரூ.85,010 கோடியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்திய மதிப்பீட்டில் அத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.83,625.86 கோடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி துறைக்கான நிதி 13 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.94,853.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.38,317.01 கோடி உயர் கல்விக்கும், 56,536.63 கோடி பள்ளி கல்விக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT