இந்தியா

டிக் டாக் வழக்கை மாற்ற இயலாது: உச்ச நீதிமன்றம் மறுப்பு

4th Jul 2019 08:01 PM

ADVERTISEMENT


டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை டிக் டாக் நிறுவனம் திரும்பப் பெற்றது.

டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி டிக் டாக் நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, "இந்த மனுவை மாற்றுவது குறித்து நாங்கள் உத்தரவிடப்போவதில்லை. இந்த விவகாரங்களை சென்னை உயர் நீதிமன்றம் மிகச் சிறந்த முறையிலேயே அணுகும்" என்று மறுப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, டிக் டாக் நிறுவனம் இந்த மனுவை திரும்பப் பெற்றது.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்பிறகு, அதே மாதம் 24-ஆம் தேதி, டிக் டாக் செயலி மீதான தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT