இந்தியா

1,253 ரயில் நிலையங்களை தரம் உயர்த்த திட்டம்:  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

4th Jul 2019 01:15 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் 1,253 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதென ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது அவர்  கூறியதாவது:
2018-19ஆம் நிதியாண்டில் 68 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன. ஆதர்ஷ் திட்டத்தின்கீழ், 1,253 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்துவதற்காக அடையாளம் காணப்பட்டன. 
அவற்றில், 1,103 ரயில் நிலையங்களில் ஏற்கெனவே தரம் உயர்த்தப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள150 ரயில் நிலையங்கள் 2019-2020 நிதியாண்டுக்குள் தரம் உயர்த்தப்பட்டுவிடும்.
ஆளிருக்கும் மற்றும் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதையை நீக்குவதற்கு சில லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகின்றன.
நாடு முழுவதும் ஆளிருக்கும் கடவுப்பாதைகள் மொத்தம் 21,340 உள்ளன. 1,048 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மக்கள் கடப்பதற்கு மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதையை ஏற்படுத்தவே சில லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 
2018-19இல் 3,479 ஆளில்லா ரயில்வே கடவுப் பாதைகள் நீக்கப்பட்டுள்ளன. பிராட் கேஜ் பாதைகளில் இருந்த ஆளில்லா கடவுப்பாதைகள் அனைத்தும் கடந்த ஜனவரி 31ஆம் தேதிக்குள்  அகற்றப்பட்டுவிட்டன என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT