இந்தியா

அமர்நாத்: 14,000 பேர் தரிசனம்

4th Jul 2019 01:24 AM

ADVERTISEMENT


அமர்நாத் குகைக் கோயிலில் சுமார் 14,000 பேர் புதன்கிழமை தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து அமர்நாத் கோயில் நிர்வாக குழு செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குகைக் கோயிலில் 13,835 யாத்ரீகர்கள் புதன்கிழமை தரிசனம் செய்தனர். மாநில ஆளுநரும், அமர்நாத் கோயில் வாரியத் தலைவருமான சத்யபால் மாலிக் உத்தரவின்பேரில், பல்வேறு முகாம்களில் இருந்தும் 4 யாத்ரீகர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த யாத்ரீகர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக ஹிந்துக்கள் ஆண்டுதோறும் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை அண்மையில் தொடங்கியது.  இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமர்நாத் குகைக் கோயிலில் கடந்த 2018ஆம் ஆண்டில் 2.85 லட்சம் யாத்ரீகர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 2015ஆம் ஆண்டில் 3.52 லட்சம் பேரும், 2016ஆம் ஆண்டில் 3.20 லட்சம் பேரும், கடந்த 2017ஆம் ஆண்டில் 2.60 லட்சம் பேரும் தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT