குஜராத்: தொழில் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பா?: முதல்வர் விஜய் ரூபானி மறுப்பு

குஜராத்தில் நடைபெறும் சர்வதேச தொழில்-வர்த்தக மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு அழைப்பு
குஜராத்: தொழில் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்பா?: முதல்வர் விஜய் ரூபானி மறுப்பு


குஜராத்தில் நடைபெறும் சர்வதேச தொழில்-வர்த்தக மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில அரசு சார்பில் காந்தி நகரில் ஜனவரி 18 முதல் 20-ஆம் தேதி வரை சர்வதேச தொழில்-வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. சர்வதேச நிறுவனங்களை குஜராத்தில் தொழில் தொடங்க அழைக்கும் வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரிலான இந்த மாநாட்டில் குஜராத் மாநில தொழில் வர்த்தக சம்மேளனமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கராச்சி தொழில்-வர்த்தக சம்மேளனத்தினருக்கு, குஜராத் தொழில்-வர்த்தக சம்மேளனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது போன்ற காரணங்களால் இரு நாடுகள் இடையே உறவு தற்போது திருப்திகரமாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதிகள் குஜராத்துக்கு வரவிருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆமதாபாதில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி சந்தித்து விளக்கமளித்தார். இது தொடர்பாக கூறியதாவது:
குஜராத்தில் நடைபெறும் தொழில்-வர்த்தக மாநாட்டில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக வெளியான தகவல்கள் தவறானவை. பாகிஸ்தான் பிரதிநிதிகள் பங்கேற்பது குறித்து எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com