புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா திடீர் அனுமதி

DIN | Published: 17th January 2019 02:59 AM

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால், சிகிச்சை எடுத்து வருகிறேன். கடவுள் கருணை, உங்களது வாழ்த்துகள் ஆகியவை இருப்பதால், விரைவில் நான் குணமடைந்து விடுவேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தில்லி எய்மஸ் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், சுவாசம் தொடர்பான பிரச்னைகள், நெஞ்சு வலி ஆகியவற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 9 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் உள்ள பழைய சிகிச்சை வார்டில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். எய்மஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான எய்மஸ் மருத்துவர்கள் குழு, அமித் ஷா உடல்நிலையை கண்காணித்து வருகிறது என்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சுவர் ஏறி குதித்து சிதம்பரம் இல்லத்தில் நுழைந்த சிபிஐ அதிகாரிகள்
என் மீது எந்த குற்றச்சாட்டு இல்லை என ப. சிதம்பரம் பேட்டி
அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
சிதம்பரம் எங்கே சென்றார்?