திங்கள்கிழமை 22 ஜூலை 2019

கும்ப மேளாவில் 1.40 கோடி பேர் புனித நீராடல்

DIN | Published: 17th January 2019 01:10 AM
கும்ப மேளாவின் தொடக்கத்தையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் புனித நீராடியவர்கள்.


உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்ப மேளா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து ஒரே நாளில் 1.40 கோடி பேர் புனித நீராடினர். 
மகர சங்கராந்தியான செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியில் இருந்தே பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவியத் தொடங்கினர். முதல் நாளின் முடிவில் 1 கோடியே 40 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
பக்தர்கள் புனித நீராடுவதற்காக கும்ப நகரி என்ற பெயரில் சுமார் 4 கி.மீ.சுற்றுப் பரப்பளவில் தற்காலிக நகரத்தை மாநில அரசு உருவாக்கியுள்ளது. 
மகா கும்ப மேளாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர். கும்ப மேளாவையொட்டி, மாநில அரசு பாதுகாப்பு மற்றும் பல்வேறு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.4200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாநில அரசு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

"கை'யறு நிலையில் காங்கிரஸ் !
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை திருப்பி அனுப்பியது மத்திய அரசு
கங்கை உள்ளிட்ட 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு
ஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் மேலும் ஓராண்டு தங்க அனுமதி