சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

எந்தச் சூழ்நிலையிலும் நமது ஜனநாயகத்தைக் காக்க வேண்டும்:  ராகுல் காந்தி

DIN | Published: 17th January 2019 01:16 AM


ஜனநாயகம்தான் நமது நாட்டின் மிகப்பெரிய வலிமை; அதனை எந்த சூழ்நிலையிலும் நாம் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த எம்.பி.க்கள் குழுவினர் நமது நாட்டு நாடாளுமன்ற விவாதம் குறித்து தன்னிடம் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக முகநூலில் (ஃபேஸ்புக்) ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நமது நாடாளுமன்ற நிகழ்வுகளைக் காண ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் ஒருமுறை வந்திருந்தனர். அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து நமது நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தனர். 
அப்போது நமது எம்.பி.க்கள் கூச்சல், குழப்பத்துடன் அமளியில் ஈடுபட்டதுடன், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவர் மீது மற்றொருவர் கடுமையாகக் குற்றம்சாட்டினர். அப்போது, வெளிநாட்டில் இருந்து வந்துள்ள எம்.பி.க்கள் நமது நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து மோசமாக நினைப்பார்களே? என்ற நினைத்தேன். அதன் பிறகு, அந்த எம்.பி.க்கள் குழுவினர் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களின் ஒரு பெண் எம்.பி. கண்ணீர் வீட்டு அழுதார். 
அது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, உங்கள் நாட்டில் விவாதிக்கவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் நாடாளுமன்றம் சிறப்பாக உள்ளது. ஆனால், எங்கள் நாட்டில் துப்பாக்கிகள் மூலம்தான் விவாதங்கள் முடிவு செய்யப்படும் என்ற மோசமான நிலை உள்ளது என்றார். அப்போதுதான் நமது நாட்டின் ஜனநாயகம் முக்கியமானது என்பது புரிந்தது. ஜனநாயகம்தான் நமது நாட்டின் பலம். அதனை எந்த சூழ்நிலையும் நாம் காக்க வேண்டும் என்று அந்த பதிவில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 

More from the section

விமானத்தைக் கடத்துவதாக ஏர் இந்தியாவுக்கு மிரட்டல்; விமான நிலையங்களில் உஷார் நிலை
சிதம்பர ரகசியம்: மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா?
13 ஆயிரம் கிராமங்களின் மண் உடன் தயாராகும் ஜாலியன்வாலாபாக் நினைவுச் சின்னம்!
அஸ்ஸாமில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
பெங்களூருவில் விமான கண்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்