சிதம்பர ரகசியம்: மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா?

மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்தே எத்தனை கேள்விகள், எத்தனை சந்தேகங்கள், எல்லாமே மக்களுக்குத்தான். 
சிதம்பர ரகசியம்: மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா?


மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்தே எத்தனை கேள்விகள், எத்தனை சந்தேகங்கள், எல்லாமே மக்களுக்குத்தான். 

அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது எப்படி? தேமுதிக இதுவரை இணையாதது ஏன் என்பது முதல் விஜயகாந்த் - ரஜினி சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானதுதானா? என்பது வரை எங்கும் கேள்விகள், எங்கும் சந்தேகங்கள்.

சரி.. இதெல்லாம் மாநிலத்தில் இருக்கும் கேள்வி. ஒரு ரவுண்டு அப்படியே தேசத்தை உற்று நோக்கினால் அங்கும் சில பல கேள்விகள் எழத்தான் செய்கிறது.

அதில் இன்றைய அளவில் முக்கியமானக் கேள்வியாக இருப்பது வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவாரா? அப்படியே போட்டியிட்டால் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்பதே.

அதாவது மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். அவரது பதவிக் காலம் வரும் ஜூன் மாதத்தோடு முடிகிறது. இவரைத் தவிர வரும் ஜூலை மாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள்தான் காலியாகின்றன. எனவே, மன்மோகன் சிங்கை மீண்டும் அசாமில் இருந்து தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அசாம் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை. அதே சமயம், தமிழகத்தில் இருந்து மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக்க திமுக ஒப்புக் கொள்ளுமா என்பது தெரியாத நிலையில் மன்மோகன் சிங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிடச் செய்யலாமா என்பதே காங்கிரஸ் கட்சிக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பம்.

ஆனால் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்கை வைத்திருக்க வேண்டும் என்பதை சோனியா விரும்புகிறார். எனவே, மாநிலங்களவையில் தற்போதிருக்கும் உறுப்பினர் யாரையேனும் பதவி விலகச் சொல்லி அவரிடத்தில் மன்மோகன் சிங்கை நியமிக்கலாம் என்பதும் ஒரு திட்டமாக உள்ளது.

ஒரு வேளை மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டால் எங்கே போட்டியிடுவார் என்ற கேள்வி அடுத்து எழத்தானே செய்யும். 

அதாவது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொகுதியில் மன்மோகன் சிங்கை நிறுத்துவது என்பதும், குறிப்பாக அமிருதசரஸ் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். சீக்கியர்களின் வாக்கு அதிகம் இருக்கும் அமிருதசரஸில் மன்மோகன் சிங்கை நிறுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது ஒரு நல்ல கணக்குத்தானே?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com