காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாததே வன்முறைக்கு காரணம்: பிரிவினைவாதிகள் கருத்து

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாததே அங்கு நிகழும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் என்று காஷ்மீர் பிரிவினைவாத


காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாததே அங்கு நிகழும் அனைத்து வன்முறைகளுக்கும் காரணம் என்று காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானதைக் குறிப்பிட்டு அவர்கள் எந்த இரங்கல் செய்தியும் விடுக்கவில்லை. தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக பிரிவினைவாதத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீர் மண்ணில் நிகழும் படுகொலைகளுக்காக காஷ்மீர் மக்களும், தலைவர்களும் வருத்தம் கொள்கின்றனர். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாததன் காரணமாகவே, இந்த மண்ணில் இதுபோன்ற துயரங்கள் தொடர்கின்றன. 
கொலைகளும், அதற்கு பழி வாங்க நடைபெறும் கொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். இந்த மண்ணில் அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நிகழக் கூடாது. இதில் தொடர்புடைய மூன்று தரப்பினரும் மனிதாபிமானம், நீதி ஆகியவற்றை மனதில் நிலைநிறுத்தி பேச்சு நடத்த வேண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதன் மூலமே இதுபோன்ற கொடுமைகளைத் தடுக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்ததில் தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல வெளிநாடுகளில் இருந்தும் இந்த தாக்குதலுக்கு கண்டனமும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், காஷ்மீர் மண்ணில் செயல்படும் பிரிவினைவாதத் தலைவர்கள் பயங்கரவாதத் தாக்குதலை கண்டிக்காததுடன், உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கலும் தெரிவிக்காமல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com