வாக்குக்கு வலைவிரிக்கும் பட்ஜெட்டா? அப்படியே இருந்தாலும் இது முதல்முறை இல்லையே!!

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பாஜக தலைமையிலான அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ளன.
வாக்குக்கு வலைவிரிக்கும் பட்ஜெட்டா? அப்படியே இருந்தாலும் இது முதல்முறை இல்லையே!!


மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பாஜக தலைமையிலான அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ளன.

பொதுமக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்து நேற்று வெளியிடப்பட் பட்ஜெட்டை நிதித் துறையை தற்காலிகமாகக் கவனித்து வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

இதுபோல தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளோடு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவல்ல, இதுபோன்று வாக்காளர்களைக் கவரும் சலுகைகளோடு பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் அமைச்சரும் பியூஷ் கோயல் இல்லை என்கிறது புள்ளி விவரங்கள்.

இதுபோன்றதொரு வாக்காளர்களைக் கவரும் அறிவிப்புகளைக் கொண்ட இடைக்கால பட்ஜெட் கடந்த 1971ம் ஆண்டே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை தாக்கல் செய்தவர் அப்போதைய நிதித்துறை அமைச்சர் ஒய்.பி. சவான். அப்போது வேலை வாய்ப்பை உருவாக்கும் பல கொள்கைகளை அவர் வெளியிட்டது கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.

தேர்தலை எதிர்நோக்கி, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பல நிதியமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாணியில்தான் பியூஷ் கோயலும் வாக்காளர்களைக் கவரும் சலுகைகளைக் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

உதாரணமாக பிரணாப் முகர்ஜி (2009-10), ஜஸ்வந்த் சிங் (2004-05), ப. சிதம்பரம் (2014-15) மற்றும் சவான் (1971-72 ஆகிய முன்னாள் நிதித்துறை அமைச்சர்களும் இதே பாணியைத்தான் கையாண்டுள்ளனர்.

கோயலுக்கு முன்பு இதுபோன்ற இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ப. சிதம்பரம். நேரடி வரியில் பல மாற்றங்களை அறிவித்த சிதம்பரம், கல்விக் கடன் சலுகை மற்றும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டங்களையும் பட்ஜெட்டில் அறிவித்து வாக்காளர்களின் ஆதரவைப் பெற விழைந்தார்.

அதில்லாமல் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்தார் ப. சிதம்பரம்.

காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐந்து ஆண்டு ஆட்சி காலம் முடிந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் முன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டும், இதுபோன்ற சலுகைகள் நிறைந்த பட்ஜெட்டாகவே இருந்தது. 

2004ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், பத்திரப் பதிவுக் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு, அந்த்யோதயா யோஜனா திட்டம் விரிவாக்கம், புதிதாக 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பது உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

எனவே, தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் சலுகைகளை அறிவித்திருப்பதாகக் குற்றம்சாட்டுவோர், இதுபோல வேறு யாருமே செய்ததில்லையா? இல்லை செய்யப் போவதேயில்லையா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com