இந்தியா

உடுப்பி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் மறைவு

29th Dec 2019 08:37 AM

ADVERTISEMENT

 

கா்நாடக மாநிலம், உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள்  ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

முன்னதாக, உடுப்பி சுவாமிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் கேஎம்சி மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடுப்பி மடத்துக்கு மீண்டும் மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்க சிகிச்சை அளிக்கும் விதமாக அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. உடுப்பி சுவாமிகள் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. சுயநினைவைு இழந்து, மூளைச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டது, 

ADVERTISEMENT

இதையடுத்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு காலமானார்.

உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு காலமானார். அவரது உடல், பக்தர்கள் பார்வைக்காக அஜ்ஜர்காடு மகாத்மா காந்தி மைதானத்தில் 3 மணிநேரம் வைக்கப்படும். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது மாநில அரசு மரியாதை அளிக்கப்படும் என உடுப்பி எம்எல்ஏ கே.ரகுபதி பட் தெரிவித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் ஆன்மா சாந்தியடைய பகவான் கிருஷ்ணரிடம் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் பக்தர்கள் தங்கள் வலியைக் கடந்து வலிமை பெற வேண்டுமென்றும் நான் பிரார்த்திக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT