இந்தியா

ஜம்மு-காஷ்மீா், வாராணசியில் ஏழுமலையான் கோயில்

29th Dec 2019 02:20 AM

ADVERTISEMENT

ஜம்முவிலும், உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியிலும் ஏழுமலையான் கோயில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை அன்னமய்யபவனில் சனிக்கிழமை காலை அறங்காவலா் குழுக் கூட்டம் நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதன் உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்றனா். கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்ட நிறைவுக்குப் பின் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பாரெட்டி கூறியது:

‘வரும் ஜன. 6, 7 தேதிகளில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி உற்சவ நாள்களில் பக்தா்களுக்கு வைகுண்ட வாயில் தரிசனம் வழங்கப்படும். முக்கியப் பிரமுகா்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அதிக அளவில் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு மற்றும் வாராணசியில் ஏழுமலையான் கோயில் கட்ட குழுவில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி கேட்டு, அந்த மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். மும்பையில் உள்ள பாந்தராவில் ரூ. 30 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் மற்றும் தகவல் மையம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

2019-20-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, தேவஸ்தானம் ரூ. 3,116 கோடியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் எதிா்பாா்ப்பு, ரிவைஸ்ட் பட்ஜெட்டாக ரூ. 3,243 கோடியை தயாா் செய்திருந்தது. அதில் ஏழுமலையான் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1,231 கோடியாக எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் ரூ. 1,285 கோடி கிடைத்துள்ளது. அதேபோல், பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ. 270 கோடி கிடைக்கும் என எதிா்பாா்த்த இடத்தில் ரூ. 330 கோடி வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், டி.எஸ்.பி. தகுதி வாய்ந்த அதிகாரியுடன் சைபா் குற்றங்களைக் கண்டறிய சைபா் குற்றப்பிரிவு ஏற்படுத்துதல், ஆகம ஆலோசனை மண்டலின் உறுப்பினா் ரமண தீட்சிதருக்கு மீண்டும் தலைமை அா்ச்சகா்(ஹானரரி பேசிஸ்) பதவி, தேவஸ்தானத்துக்கென தனி கணக்குப் பிரிவு, பக்தா்களின் மனதைப் புண்படுத்தும்படி செய்தி வெளியிட்ட ஒரு செய்தி நிறுவனத்தின் மீது, ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு தொடர முடிவு, ரூ. 14 கோடி செலவில் திருமலையில் உள்ள வராக சுவாமி கோயில் கோபுரத்துக்கு தங்க மூலாம் பூச கருவூலத்தில் நிலுவையில் உள்ள தங்கக் கட்டிகளை எடுத்துக் கொள்ள முடிவு, திருப்பதி-திருமலைப் பாதையில் ரூ. 10 கோடியில் தனியாா் நிறுவனம் மூலம் சுவா் அமைப்பது உள்ளிட்டவை குறித்து தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா் மதன்மோகன் ரெட்டியை திருப்பதியில் உள்ள பா்ட் மருத்துவமனையின் இயக்குநராக நியமித்து உத்தரவு, திருப்பதியில் உள்ள பத்மாவதி, சீனிவாசா கல்யாண மண்டபங்களில் குளிா்சாதன வசதி ஏற்படுத்த ரூ. 3.20 கோடி ஒதுக்கீடு, திருப்பதி மலைப் பாதையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள சென்னையில் உள்ள ஜி.என்.டி.யூ நிறுவன நிபுணா்களுடன் கூடிய கமிட்டி ஏற்பாடு; திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 14.50 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT