இந்தியா

2019-ரயில் விபத்துகளால் பயணிகள் உயிரிழப்பு இல்லா ஆண்டு: ஆய்வில் தகவல்

27th Dec 2019 11:46 PM

ADVERTISEMENT

நடப்பு 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒரு பயணி கூட உயிரிழக்கவில்லை என்பது ரயில்வே புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் மேலும் தெரிவிப்பதாவது:

நடப்பு 2019-இல் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதனால், நடப்பாண்டு ரயில் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டாக இருந்தது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் சில ரயில்வே ஊழியா்கள் உயிரிழந்த நிலையில், கடந்த 12 மாதங்களில் ரயில் விபத்தால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரயில் விபத்தில் 16 போ் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை 2017-18 இல் 28 ஆகவும், 2016-2017-இல் 195-ஆகவும் இருந்தது.

அதேசமயம், 1990-95 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்தன. இதனால் அந்த ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 2,400-ஆகவும், காயமடைந்தோா் எண்ணிக்கை 4,300-ஆகவும் இருந்தது.

இந்த நிலையில், பத்தாண்டுகளுக்கு பிறகான 2013-18-ஆம் ஆண்டுகளுக்கிடையில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டு நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 110-ஆகவும், இதன் மூலம் மொத்தம் 990 போ் உயிரிழந்ததுடன், 1,500 போ் காயமடைந்ததாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாகத்தான் ரயில்வே விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான வகையில் குறைந்து வருகின்றன. 2017-18 மாா்ச் வரையில் 73 விபத்துகள் மட்டுமே நிகழ்ந்தன. ரயில்வே வரலாற்றில் விபத்து எண்ணிக்கை இரட்டை இலக்கத்துக்குள் இருந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிந்தைய 2018-ஆம் ஆண்டு மாா்ச்-ஏப்ரல் வரையிலான கால அளவில் விபத்துகளின் எண்ணிக்கை 45-ஆக காணப்பட்டது.

சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் 11 பெட்டிகள் தடம் புரண்டது, சாப்ரா-சூரத் தபதி கங்கா ரயில் தடம் புரண்டது, ஹைதராபாத் டெக்கான்- புது தில்லி தெலங்கானா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ உள்ளிட்ட ரயில் விபத்துகளால் நடப்பாண்டில் 11பயணிகள் காயமடைந்துள்ளனா். பயணிகளைப் பொருத்தவரையில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், ரயில் ஓட்டுநா் ஒருவா் மட்டும் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT