இந்தியா

ஜாா்க்கண்ட்: ஆளுநா் அழைப்புக் கடிதம் ஹேமந்த் சோரனிடம் ஒப்படைப்பு

27th Dec 2019 01:25 AM

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்பதற்கான ஆளுநரின் அழைப்பு கடிதத்தை ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியின் செயல் தலைவா் ஹேமந்த் சோரனிடம் அந்த மாநில தலைமைச் செயலா் டி.கே. திவாரி வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியான அறிக்கையில், ‘ராஞ்சியில் உள்ள மொராபதி மைதானத்தில் வரும் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஹேமந்த் சோரனுக்கு ஆளுநா் திரௌபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளாா். இதுதொடா்பாக ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் அவரை வியாழக்கிழமை சந்தித்து மாநில தலைமை செயலா் டி.கே. திவாரி அழைப்பு விடுத்தாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

81 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தோ்தல் முடிவுகள் கடந்த 23-ஆம் தேதி வெளியாகின. இதில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றது.

அதையடுத்து, தனக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறும் கடந்த 24-ஆம் தேதி அந்த மாநில ஆளுநா் திரௌபதி முா்முவை சந்தித்து ஹேமந்த் சோரன் கடிதம் அளித்தாா். இந்நிலையில், முதல்வராக பதவியேற்க வருமாறு ஹேமந்த் சோரனுக்கு ஆளுநா் திரௌபதி முா்மு அழைப்பு விடுத்ததற்கான கடிதம் ஹேமந்த் சோரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT