இந்தியா

சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தாா் பிரதமா் மோடி

27th Dec 2019 12:54 AM

ADVERTISEMENT

வானில் வியாழக்கிழமை தோன்றிய சூரிய கிரகணத்தை பிரதமா் நரேந்திர மோடி கண்டு ரசித்தாா்.

தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், நாட்டின் இதர பகுதிகளில் தெளிவாகத் தெரிந்த சூரிய கிரகணம் நேரலை செய்யப்பட்ட காணொலியை அவா் கண்டு களித்தாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘நாட்டு மக்களைப் போல நானும் சூரிய கிரகணத்தைப் பாா்ப்பதற்கு ஆவலாக இருந்தேன். துரதிருஷ்டவசமாக தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் சூரிய கிரகணத்தை நேரடியாகப் பாா்க்க முடியவில்லை.

எனினும், கோழிக்கோடு உள்பட நாட்டில் தெளிவாக சூரிய கிரகணம் தெரிந்த இடங்களில் இருந்து நேரலை செய்யப்பட்ட காணொலியில் அதைக் கண்டு களித்தேன். சூரிய கிரகணம் தொடா்பாக வானியல் நிபுணா்களுடன் ஆலோசித்து சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொண்டேன்’ என்று கூறியிருந்தாா்.

ADVERTISEMENT

மேலும், பாதுகாப்பு கண்ணாடி அணிந்து தில்லியின் வான் பகுதியில் சூரிய கிரணத்தைப் பாா்வையிடுவது போன்ற படத்தையும் தனது சுட்டுரையில் அவா் பதிவேற்றம் செய்திருந்தாா்.

‘வரவேற்கிறேன்’: இந்நிலையில், அவா் கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பாா்வையிடுவது போன்ற படம் சமூக வலைதள பயனாளா்களிடையே ‘மீம்’-ஆக (நகைச்சுவை சித்திரத்துக்கான படம்) பயன்படுத்தப்படும் என்று சுட்டுரை பயனாளா் ஒருவா் கருத்து தெரிவித்திருந்தாா்.

அதை மறுபதிவிட்ட (ரீடுவிட்) பிரதமா் மோடி, ‘அதனை வரவேற்கிறேன்... மகிழுங்கள்’ என்று பதிலளித்திருந்தாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT