இந்தியா

கடும் குளிர் எதிரொலி: கான்பூர், காசிபாத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

26th Dec 2019 12:16 PM

ADVERTISEMENT

கடும் குளிர் காரணமாக கான்பூர், காசிபாத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடும் குளிர் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அம்மாவட்ட மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்துள்ளார். 

இதேபோல் கான்பூரில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT