இந்தியா

2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர்: பிரதமர் மோடி உறுதி

25th Dec 2019 12:44 PM

ADVERTISEMENT


புது தில்லி: 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைப்பதை 'அடல் நிலத்தடி நீர் திட்டம்' உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் நிலத்தடி நீர் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜ்னா என்று பெயரிடப்பட்டுள்ள அடல் நிலத்தடி நீர் திட்டத்தை, தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, வரும் 5 ஆண்டுகளில் 15 கோடி வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதி செய்யும்.

7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8300 கிராம பஞ்சாயத்துகளின் நிலத்தடி நீர் மட்டம் கவலை அளிக்கிறது. பல்வேறு தேவைகளில் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இந்த திட்டம் ராஜஸ்தான் உட்பட 7 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT