கோதாவரி: ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டுள்ளது.
ஸ்ரீசக்ரா எண்ணெய் ஆலையில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. ஆலையில் இருந்து கரும்புகை வெளிவந்து கொண்டிருக்கிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.