குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடைபெற்று வருவதால் மாண்டி ஹவுஸ் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் தில்லியில் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனைவரும் தில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் கூடினர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்புகுதியில் போலீஸாரும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.