இந்தியா

வாஜ்பாயின் சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

24th Dec 2019 12:11 PM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வெண்கல சிலையை  உத்தரப் பிரதேசத்தில் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச்சிலை உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகமான லோக் பவன் நுழைவாயிலில் நிறுவப்படவுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் என்பவரால் ரூ.89.6 லட்ச மதிப்பில் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நிறுவப்படுவதன் மூலமாக மாநிலத்தின் மிக உயரமான சிலையாக இது இருக்கும்.

வாஜ்பாயின் பிறந்தநாளான நாளை (டிசம்பர் 25ம் தேதி) இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மேலும், பிரதமர் இவ்விழாவில் உரையாற்றவும் உள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே, உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவிரப் போராட்டம் நடந்து வரும் நிலையில், பிரதமர் வருகையையொட்டி, லக்னெளவில் தீவிரப் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT