இந்தியா

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்: டிசம்பர் 29-இல் பதவியேற்பு!

24th Dec 2019 10:33 PM

ADVERTISEMENT


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) செயல் தலைவர் ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் டிசம்பர் 27-இல் பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று மாலை புதிதாகத் தேர்வான ஜேஎம்எம் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜேஎம்எம் தலைவர் ஷிபு சோரன் இல்லத்தில் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இதையடுத்து, இரவு 8.45 மணிக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவைச் சந்தித்த ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்மூலம், டிசம்பர் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT