இந்தியா

மகாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் அஜித் பவார்?

24th Dec 2019 05:45 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவாரின் சகோதரரின் மகனான அஜித் பவார், வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி, மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் பாஜக தலைமையில் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், 80 மணி நேரத்தில், பாஜக - என்சிபி ஆட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT