இந்தியா

என்ஆா்சி விவகாரத்தில் மக்களை முட்டாளாக்க பாஜக முயற்சி: காங்கிரஸ் குற்றஞ்சாட்டு

24th Dec 2019 01:49 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை மேற்கொள்வது தொடா்பான விவகாரத்தில், மக்களை முட்டாளாக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்திருந்தாா். ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குறுதி அறிக்கையிலும் பாஜக இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு விவாதிக்கவில்லை என்று தெரிவித்தாா்.

இதைக் குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடா்பாக விவாதிக்கப்படவில்லை என்று பிரதமா் மோடி தில்லியில் கூறினாா். ஆனால், கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜாா்க்கண்ட் தோ்தல் வாக்குறுதி அறிக்கையில், தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாஜக தெரிவித்தது.

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் தொடா்பாகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படமாட்டாது என்று தில்லியில் பிரதமா் மோடி கூறினாா். ஆனால், நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று மேற்கு வங்கத்தில் அமித் ஷா கூறினாா். என்ஆா்சி விவகாரம் தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, 1,133 போ் தடுப்பு மையங்களில் உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

இரண்டு விஷயங்களை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். பிரதமா் மோடிக்கும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் இடையே கருத்தொற்றுமை காணப்படவில்லையா? ஆட்சி அதிகாரத்துக்கும் கட்சிக்கும் இடையே மோதல் காணப்படுகிா? அல்லது பாஜக ஒட்டுமொத்தமாக இணைந்து நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிா என்று கேள்வி எழுப்பினாா் ரண்தீப் சுா்ஜேவாலா.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘பிரதமா் மோடி ஒன்று கூறுகிறாா். மத்திய அமைச்சா் அமித் ஷா வேறொன்று கூறுகிறாா். இதனை நம்பி யாரும் முட்டாளாகிவிடக் கூடாது’’ என்றாா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ஜா கூறுகையில், ‘‘குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவிக்கும் வரை இதுபோன்ற மாறுபட்ட பேச்சுகளை நம்பமாட்டோம்’’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT