இந்தியா

ஆந்திரத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என முதல்வர் உறுதி: மத்திய அரசுக்கு பின்னடைவு!

23rd Dec 2019 10:41 PM

ADVERTISEMENT


ஆந்திரப் பிரதேசத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 3 நாள் பயணமாக இன்று (திங்கள்கிழமை) கடப்பா மாவட்டத்துக்குச் சென்றுள்ளார். அங்கு ரிம்ஸ் மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசிய,

"என்ஆர்சி-க்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் கடப்பாவில் வந்து இறங்கி, இங்கு வருவதற்கு முன் இஸ்லாமியர்கள் சிலர் என்னிடம் வந்து என்ஆர்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். என்ஆர்சிக்கு அரசு ஆதரவு அளிக்காது என்று நமது துணை முதல்வர் அஸ்மத் பாஷா ஷைக் பெபாரி (கடப்பா தொகுதியின் பிரதிநிதி) ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். அவர் அந்தக் கருத்தைக் கூறுவதற்கு முன் இவ்விவகாரம் குறித்து என்னிடம் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, அவருடையக் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். 

என்ஆர்சியை எதிர்ப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்றார்.

ADVERTISEMENT

முன்னதாக, ஒய்எஸ்ஆர்சி கட்சிக்கு 22 மக்களவை உறுப்பினர்களும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி ஆகிய இரண்டுக்கும் எதிராக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT