இந்தியா

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ஜெஎம்எம்!

23rd Dec 2019 04:20 PM

ADVERTISEMENT


ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 42 இடங்கள் தேவை. இந்நிலையில், ஜெஎம்எம் - காங்கிரஸ் - ராஷ்டிர ஜனதா தளம் (ஆர்ஜேடேி) கூட்டணி 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதில், ஜெஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஆர்ஜேடி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 24 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. எனவே, 29 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஜெஎம்எம் அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஜெஎம்எம் 19.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT