இந்தியா

சபரிமலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஜனவரியில்மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை

23rd Dec 2019 01:48 AM

ADVERTISEMENT

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு முன் ஜனவரியில் விசாரணைக்கு வரலாம் என்று தெரிகிறது.

இதுதொடா்பாக நான்கு மனுக்களின் நகல்களையும், அதுதொடா்புடைய வேறு ஆவணங்களையும் உச்சநீதிமன்ற துணைப் பதிவாளா் கோரியுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘மறுஆய்வு மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அமா்வு முன் அடுத்த மாதம் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது’ என்றாா்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக கேரளத்திலும், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. முக்கியமாக கேரளத்தில் பல்வேறு அமைப்பினா் தொடா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினா் சாா்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு, இந்த மனுக்களையும், இஸ்லாமியப் பெண்கள் தொழுகை விவகாரம் உள்ளிட்ட மனுக்களையும் 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி கடந்த மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT