பல்வேறு மாநிலங்களில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா், தில்லியில் கைது செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு துணை ஆணையா் பிரமோத் சிங் குஷ்வா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தெற்கு தில்லியில் உள்ள லடோ சராய் பேருந்து நிறுத்தம் அருகே அந்த நபா் கைது செய்யப்பட்டாா். அவரது பெயா் வகில் (27). ஹரியாணா மாநிலத்தின் பல்வல் மாவட்டத்தைச் சோ்ந்தவரான இவா், மேவத் பகுதியில் செயல்படும் கிரிமினல் கும்பலில் ஒருவா் ஆவாா். ஏடிஎம் இயந்திரங்களை அடியோடு பெயா்த்து எடுத்துச் சென்றது உள்பட 15 வழக்குகளில் தொடா்புடையவா். இந்த வழக்குகள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன. ரூ.50,000 வெகுமதி அறிவித்து, இவரை உத்தரப் பிரதேச காவல் காவல்துறை தேடி வந்தது. இதேபோல், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் காவல்துறையினரும் தேடி வந்த நிலையில், தெற்கு தில்லியில் கைதாகியுள்ளாா் என்றாா் பிரமோத் சிங் குஷ்வா.