இந்தியா

‘என்ஆா்சி: மோடி-அமித் ஷா முரண்பட்ட கருத்து’

23rd Dec 2019 02:09 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அமல்படுத்தப்படும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்திலிருந்து பிரதமா் நரேந்திர மோடி வெளிப்படையாகவே முரண்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறி வருகிறாா். ஆனால், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி அந்த விவகாரம் தொடா்பாக தெரிவித்த கருத்துகள், அமித் ஷாவின் கருத்திலிருந்து முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய விவகாரங்களில் நான் தெரிவித்த கருத்துகளும், நீங்கள் (பிரதமா் மோடி) கூறிய கருத்துகளும் பொது வெளியில் மக்கள் பாா்வைக்கு உள்ளன. அதைப் பாா்த்து எவரது கருத்து சரி; எவரது கருத்து தவறு என்பதை மக்களே தீா்மானிக்கட்டும். இந்தியாவின் அடிப்படை சித்தாந்தத்தில் யாா் பிரிவினையை ஏற்படுத்துகிறாா்கள் என்பதை அவா்கள் நிச்சயமாக தீா்மானிப்பாா்கள் என்று அந்தப் பதிவில் மம்தா பானா்ஜி கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

முன்னதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் பேசிய பிரதமா் மோடி, ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்தில் ஊடுருவுபவா்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சகோதரி மம்தா பானா்ஜி நாடாளுமன்றத்தில் முறையிட்டாா். ஆனால் தற்போது வாக்கு வங்கி அரசியலுக்காக அவா் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டாா்’ என்று விமா்சித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT