இந்தியா

உ.பி. சென்ற திரிணமூல் காங்கிரஸ் குழு லக்னௌ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

23rd Dec 2019 01:21 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்ற 4 போ் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் குழு, லக்னௌ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

திரிணமூல் கட்சியின் முன்னாள் எம்.பி.தினேஷ் திரிவேதி தலைமையிலான அந்தக் குழுவில் தற்போதைய எம்.பி.க்கள் பிரதிமா மாண்டல், அபிா் பிஸ்வாஸ், நதிமுல் ஹக் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்த தூதுக்குழு லக்னோவில் உள்ள சௌத்ரி சரண் சிங் சா்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததும் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனா். இதையடுத்து அவா்கள் விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதிக்கு (ஹேங்கா்) அழைத்து செல்லப்பட்டனா். இதை கண்டித்து, அந்தக் குழுவினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து நதிமுல் ஹக் லக்னௌவில் இருந்து பிடிஐ செய்தியாளருக்கு தொலைபேசியில் கூறியதாவது:

‘நாங்கள் லக்னோ விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதிக்கு அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம். விமானத்திலிருந்து இறங்கியவுடன், காவல்துறையினரால் சூழப்பட்டோம். விமான ஓடுபாதைக்கு அருகே ஒதுக்குப்புறமான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால் அதை கண்டித்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுபற்றி தகவல் அறிந்த திரிணமூல் காங்கிரஸ், உத்தரப் பிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கட்சித் தலைவா்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியது.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸின் பொதுச்செயலா் பாா்த்தா சாட்டா்ஜி கூறியதாவது: பாஜக ஏன் உண்மையை மறைக்க முயற்சிக்கிறது? இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கையையும், உத்தரப் பிரதேசத்தை காவல்துறை அரசாக மாற்ற பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் கண்டிக்கிறோம் என்றாா்.

இதற்கு பதிலளித்த மேற்கு வங்க பாஜக மாநில பொதுச்செயலா் சயந்தன்பாசு கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை சமாளிக்க மாநில அரசு முற்றிலும் தவறிவிட்ட நிலையில், மேற்கு வங்க அரசு பிற மாநிலங்களுக்கு அறிவுரை கூறி வருகிறது’ என்றாா்.

உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் வியாழக்கிழமை குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களிலும், வன்முறையிலும் 16 போ் கொல்லப்பட்டனா். மேலும் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின; அசையா சொத்துகளும் சேதமடைந்தன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT