இந்தியா

வன்முறையற்ற, சத்தியாக்கிரக வழிமுறையை மேற்கொள்வதே சிறந்தது: ராகுல் காந்தி ட்வீட்

16th Dec 2019 01:34 PM

ADVERTISEMENT

 

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வன்முறையற்ற, சத்தியாக்கிரக வழிமுறையை மேற்கொள்வதே சிறந்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதேபோன்று, தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியாவின் மீது பாசிஸ்டுகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிகப்பெரும் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் மேற்கொள்ள வேண்டும். வன்முறையற்ற, சத்தியாக்கிரக வழிமுறையை மேற்கொள்வதே சிறந்தது. அமைதியான வழியில் போராடும் அனைவருடனும் நான் துணை நிற்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT