இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்தம்: சத்யாகிரகத்தில் கேரள முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

16th Dec 2019 12:57 PM

ADVERTISEMENT


திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெறும் சத்யாகிரகப் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனும், முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு தியாகிகள் நினைவு தூண் அருகே தொடங்கிய சத்யாகிரகப் போராட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலாவும் தலைமை வகித்தனர்.

மாநிலத்தின் அமைச்சர்கள், பாஜக தவிர்த்து முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஆளுங்கட்சியுடன், எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் போராட்டமாக இது மாறியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : kerala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT