இந்தியா

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!

16th Dec 2019 04:10 PM

ADVERTISEMENT


ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-ஆம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 30-ஆம் தேதியும், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 7-ஆம் தேதியும், 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12-ஆம் தேதியும் நடைபெற்ற நிலையில், இன்று 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

4-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தம் 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், பகோதர், ஜாமுவா, கிரிதி, தும்ரி மற்றும் துண்டி ஆகிய 5 தொகுதிகளில் பிற்பகல் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதில் பிற்பகல் 3 மணி வரை 53.37 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

இந்த 4-ஆம் கட்ட தேர்தலில் 23 பெண்கள் உட்பட மொத்தம் 221 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த 15 தொகுதிகளில் தியோகர், ஜாமுவா மற்றும் சந்தன்கியாரி ஆகிய தொகுதிகள் தனித்தொகுதிகளாகும்.

ADVERTISEMENT

Tags : Jharkhand polls ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT