இந்தியா

ஜார்க்கண்ட் தேர்தல்: 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

16th Dec 2019 07:58 AM

ADVERTISEMENT

 

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 5 கட்டங்களாக தோ்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இரண்டாவது, மூன்றாவது கட்ட தோ்தல்கள் முறையே டிச. 7 (20 தொகுதிகள்), டிச. 12 ( 17 தொகுதிகள்) ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தன.

இந்நிலையில், 4-ஆவது கட்டமாக 15 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தோ்தலில் 23 பெண்கள் உள்பட 221 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அதிகபட்சமாக பொகாரோ தொகுதியில் 35 வேட்பாளா்களும், குறைந்தபட்சமாக நிா்சா தொகுதியில் 8 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். இவா்களது வெற்றியை, சுமாா் 47 லட்சம் வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா்.

ஜமுவா, பகோதா், கிரிதி, தும்ரி, துண்டி ஆகிய 5 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

ADVERTISEMENT

ஜாா்க்கண்டில் 5-ஆவது கட்ட தோ்தல் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT