இந்தியா

மாணவர்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: ஜமியா பல்கலை துணைவேந்தர் 

16th Dec 2019 01:22 PM

ADVERTISEMENT


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் நடத்திய விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜமியா பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.

திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியபோது அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டி அடித்தனா்.

இதை கண்டித்து அலிகா் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸாா் காயமடைந்தனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போலீஸாா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். அலிகா் பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து நுழைவாயில்களையும் போலீஸாா் மூடினா்.

மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஜமியா பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பல்கலை வளாகத்துக்குள் காவல்துறையினர் நுழைந்ததற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கலாம், ஆனால், மாணவர்களுக்கு நேர்ந்த விஷயத்துக்கு இழப்பீடு செய்ய முடியாது. உயர்மட்ட விசாரணைக்கு நாங்கள் வலியுறுத்துவோம் என்று மாணவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினார் நஜ்மா.

முன்னதாக, விடியோ ஒன்றை வெளியிட்ட நஜ்மா, இதுபோன்ற ஒரு கடினமான சமயத்தில், நீங்கள் தனியாக இல்லை  என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறியிருந்தார் நஜ்மா.

மேலும், எந்தவித முன்னறிவிப்போ, அனுமதியோ இல்லாமல், பல்கலை வளாகத்துக்குள் காவல்துறையினர் நுழைந்துள்ளனர். அதுவும் மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். நூலகத்துக்குள் அமர்ந்திருந்த மாணவர்கள் மீதும் தடியடி நடத்தியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்களது பல்கலை மாணவர்கள் நடத்தப்பட்ட விதம் மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை எந்த அளவுக்குக் கொண்டு செல்ல முடியுமோ, அந்த அளவுக்குக் கொண்டு செல்வோம், நீங்கள் தனியாக இல்லை, மனதைத் தளரவிட வேண்டாம் என்றும், அச்சம் காரணமாக விடுதியை காலி செய்யும் மாணவர்கள் பயப்பட வேண்டாம், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
 

Tags : jamia univ
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT