இந்தியா

ஜாமியா பல்கலை.யில் துணைவேந்தர் அனுமதிக்காமல் போலீஸார் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்? - குலாம் நபி ஆசாத் கேள்வி

16th Dec 2019 03:24 PM

ADVERTISEMENT

 

ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. நேற்று தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது, மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று லக்னோ, மும்பை, ஹைதராபாத், பாட்னா உள்ளிட்ட பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், துணைவேந்தர் அனுமதிக்காமல் ஜாமியா பல்கலைக்கழகத்தில் தில்லி போலீஸார் எவ்வாறு நுழைந்திருக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜாமியா பல்கலைக்கழகத்தில் போலீஸ் நுழைந்தது குறித்து நீதி விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து பேசிய அவர், 'மத்திய அரசுதான் உண்மையான குற்றவாளி. ஒரு சட்டத்தை கொண்டு வருவதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் நாடாளுமன்றத்தில் 'செல்வாக்கற்ற' மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி , உத்தரப்பிரதேசம் என பெரும்பாலாக அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இச்சட்டத்தை மக்கள் ஏற்கத் தயாராக இல்லை' என்றும் கூறினார்.

Tags : குடியுரிமை சட்டம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT