இந்தியா

தில்லி மெட்ரோ ரயில் சேவை இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

16th Dec 2019 08:08 AM

ADVERTISEMENT

 

தில்லியில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது மாணவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக தில்லியில் 15 மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது. தில்லி போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திங்கள்கிழமை வழக்கம்போல் திறக்கப்பட்டு, அனைத்து ரயில் சேவைகளும் இயங்கும் என தில்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

ADVERTISEMENT

Tags : Delhi Metro
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT