இந்தியா

சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினரின் பின்னோக்கி நடக்கும் போராட்டம்!

16th Dec 2019 10:39 AM

ADVERTISEMENT

 

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில், ஆந்திராவில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், பேருந்தில் பயணம் செய்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

தொடர்ந்து, இன்று சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சிக்கள் போராட்டம் நடத்தினர். தற்போதைய அரசில் ஆந்திரப்பிரதேசத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில் அவர்கள் பின்னோக்கி செல்லும் போராட்டத்தை நடத்தினர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT