இந்தியா

மூன்றே நாள்களில் மொபைல் நெட்வொர்க் மாற்றம்: வருகிறது டிராய்யின் புதிய நடைமுறை!

16th Dec 2019 10:42 PM

ADVERTISEMENT


மொபைல் நெட்வொர்கை போர்ட் செய்ய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மொபைல் நெட்வொர்க் போர்ட் என்பது ஒரே அலைபேசி எண்ணை வைத்துக் கொண்டு வேறு ஒரு நெட்வொர்க்கைத் தேர்வு செய்து மாறிக்கொள்வதாகும். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குக்கு மாற சற்று காலம் எடுத்துக்கொள்ளும். இதன் காரணமாக, அந்த நெட்வொர்க் மாற்றம் நடைமுறை முழுமையாக நிறைவடையும் வரை வாடிக்கையாளர்கள் சற்று சிரமத்துக்குள்ளாக வேண்டிய நிலை இருந்தது.

எனவே, இந்த மொபைல் நெட்வொர்க் போர்ட் நடைமுறை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையிலும் துரிதமாக இருக்கும் வகையிலும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் 3 முதல் 5 நாள்களிலேயே மொபைல் எண்ணை புதிய நெட்வொர்க்குக்கு மாற்றிவிடலாம். இந்த நடைமுறை இன்று (டிசம்பர் 16) முதல் அமலுக்கு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT